தலைவாசல்
களஞ்சியம்
நூலகம்
அகராதி
தமிழ்
மாணவன்
ஆசிரியர்
சங்கம்
தமிழன்
தலைவர்கள்
பூம்புகார்

பூம்புகார் தமிழ் மின்பதிப்புத் திட்டம்

செந்தமிழ் இணையம் தொடங்கும் முன்பே பல தமிழ் அன்பர்கள் நமது பல தேவைகளுக்காக பண்டைய தமிழ் நூல்களை கணணியில் தட்டச்சு செய்து வைத்துள்ளோம். நமது மொத்த தமிழ் நூல்களை ஒப்பிடும் போது இவை ஒர் சிறிய பகுதிதான் எனவே அனைத்து தமிழனுக்கும் உரித்தான நமது தமிழ் சொத்தை எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது இணையதளத்துக்கோ உரிமையாக்காமல். அனைத்து தமிழ் சொந்தங்களும் உரிமையான சொத்தாக மாற்றும் ஒர் திட்டத்தை தீவிரபடுத்த உள்ளோம்

சில குறிப்பிட் இணையதளங்கள் நமது சொத்தான தமிழ் நூலை தட்டச்சு செய்து உரிமை பாராட்டி வருகின்றன. இதனால் எந்த பிரதிபலனும் பாராத நமது தமிழ் சொந்தங்கள் தாங்கள் தட்டச்சு செய்து வைத்துள்ள காப்புரிமைக்கு உட்பட்ட நூல்களை; அனைத்து உண்மையன தமிழனுக்கும் சொந்தமான செந்தமிழ் இணையத்துக்கு அனுப்பவேண்டுகிறோம். நீங்கள அனுப்பும் நூல்கள் நமது சொத்தான நமது தமிழ் முன்னோர் எழுதியதாக இருக்க வேண்டுகிறோம்.

மேலும் தாங்கள் தட்டச்சு செய்த ஒர் சிறிய பணியை உண்மையிலே அந்த நூலை எழுதியவரின் மகத்தான பணியுடன் ஒப்பிட்டு செய்து தாங்களின் பெயர்களை கட்டாயபடுத்தி போடுவதை தவிர்க்க அன்புடன் வேண்டுகிறோம்.

இந்த செந்தமிழ் இணையத்தை இயக்கும் எவரும் தமது சேவையை உண்மையாக தமிழ் சமுகத்துக்கு செய்தவருகின்றனர். எந்த ஒரு இடத்திலும் தமது பெயரை சுய விளம்பரத்துக்காக போடுவது இல்லை எனவே இத்திடடத்தில் பங்குபெறும் அனைவரும் சுய விளம்பரம் தேட விழையாதவர்களாக இருக்க அன்புடன் வேண்டுகிறோம்

நமது முன்னோர்களின் எழுத்துக்கள் சேரவேண்டிய மின் முகவரி project poompuhar